வாரம் 22, 2008.
MAY 26 தேதியில் தொடங்கிய இந்த வாரத்தில் ஆபீஸ் சாதனையாக எதாவது குறிப்பிட வேண்டுமென்ற அவாயிருந்தது.
MAY 30, வெள்ளி, அன்று சாதனையாக நான் கருதியது, ஆபீஸில் மற்றவர்கள் சாதனைகளை ஏக்கத்துடன் பார்த்ததை!
வாரம் 23, 2008
CLAPS..CLAPS..
இந்த வாரம் பாருங்க சார், ஆபீஸ் கிறுக்கலை ஆபீஸிலேயே எழுத முடியாதளவு பிஸியாகயிருந்து விட்டேன். பில்ஸ், பர்சேஸ் ஆர்டர்ஸ், என் பிரபோஸல்கள் என்று செம பிஸி!!!
திருக்குறளையும் ஆபீசையும் சேர்ந்து படிக்க ஆசை.
செய்வேன்.
ஊக்கமான முயற்சி மனதினுள்ளே உள்ளது.
தளர்ச்சியில்லாத மன ஊக்கம் உள்ள ஒருவனடித்தில், ஆக்கமானது அவனிடத்தே வழி கேட்டுச்சென்று சேரும்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
தளர்விலா ஊக்கத்தை நான் ஆபீஸ் கொண்டு செல்கிறேன்.
ஆக்கமே வா!
இந்த வார ஆக்கம்:
ஆபீஸ் shifting செயலுக்காக Cash Award கிடைத்தது.
ரூ.750/-
kirukan பதிப்பித்தது. 