ஜனவரி 2008.

பெப்ரவரி 2, 2008

இப்பொழுது  எனக்கு தமிழில் எழுத உதவுவது:

my web duniya

 2008 முதல் வாரம்.

ஆபீஸ் டயரியை ஆபீஸிலேயே எழுத வேண்டும்.

அதுவும் முழிக்கக்கூட சோம்பேறித்தனமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் எழுத வேண்டும்.

ஜனவரி முதல் வாரம் COOL தான்!

Sr.AFA இருக்கவில்லை.

Sr.AFA போடும் ஆட்டங்களை எழுதுகிறேன், பிரிதொரு சந்தர்ப்பத்தில்.
அதற்கான எண்ணங்கள் மனதில் நிறைய நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. வரிசை படுத்திக்கொண்டுள்ளேன். விரைவில் எழுதி விடுவேன்.

சந்திரசேகர் ஆட்டங்கள் என்ற tag போட்டுக்கொள்கிறேன்.

செய்தி: குதிக்கும் பார்த்தசாரதி மைசூருக்கு மாற்றலாகி விட்டான்.
04-01-08 வெள்ளியன்று ஜான்சன் தொகுப்பாளியாக, பார்த்தசாரதிக்கு farewell.

இப்பொழுது  எனக்கு தமிழில் எழுத உதவுவது:

வாரம் 2  ஜனவரி 2008

ஒரு நாள் லீவ் போட்டு பரீட்சைக் படிக்க ஆசைப்பட்டேன்.

முடியவில்லை!

பார்ப்போம் அடுத்த வாரம்.

இரண்டு டெண்டர்கள் இருந்தன.

பரீட்சை குறித்து பயமாக உள்ளது.

வாரம் 3  ஜனவரி 2008

பிரச்னை என்ன?
சோம்பேறித்தனம்!
மசமசப்பு.
கூடப்பிறந்தது.
வெறுக்க வேண்டாம்.

விரும்பு.

வழிகள் தான் இருக்கின்றன்வே!

அந்த வழிகளைத்தான் நன்கு அறிவேனே!!

அதில் ஒன்றுதான் ஆபீஸ் டயரி எழுதுவது.

இதோ 2008, வாரம் மூன்று எழுதுகிறேனே.

இரண்டு Estimate கள் படு பயங்கரமாக முழிக்க வைத்துக்கொண்டுள்ளன.
சுறு சுறுப்பாக Sr.AFA யிடம் discuss செய்து வழி செய்து விடலாம் என்று நினைத்தேன்.
Sr.AFA யிடம் சென்றால் supplementary M&P proposal ஒன்றைக்குறித்து முழிக்க வேண்டியதாகிவிட்டது!
அப்புறம் Chittaranjan Das வந்தான். ஒரு Estimateக்கு quantity justification, ஒரு itemக்கு விலை எல்லாம் புரிந்து விட்டது. Dy.யிடம் சொன்னால், vetted என்று எழுதி வேலையை முடித்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டேன்.

இல்லை…… அந்த படவா
“ஐய்யோ இதற்கு condition எழுத வேண்டும்” என்று வேலைக்கு முற்றுப் புள்ளி வைக்க விடாமல்….. மீண்டும் புள்ளிகள் வைத்தான்.

Trouble with these people…..என்னவென்றால், அவனுங்களுக்கு தலை போகவில்லையென்றால் அல்லது credit வராது என்றால், மீண்டும் மீண்டும் புள்ளிகளை வைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்தப் புள்ளிகளை சரியானபடி ஏற்றுக்கொள்வதுதான் என் பொழப்பு.

நீதி: சுறுசுறுப்புக்கு சந்திரசேகரிடம் போகத்தேவையில்லை.
கடவுள் அதற்கு வேறு வழி வைத்திருக்கிறார்.

இவனுங்க பிஸியாக இருந்து விடுவாங்க. நம்ம வேலைக்குப் போக சில சமயம், “நேரம்” சரியில்லாமல் போய் விடும். இந்த தருணத்தில் எனக்கு லீவ் எடுக்க வேண்டும்…. அவனிடம் போனால் இன்னும் ஐந்து நிமிடம் என்கிறான்.

அந்த ஐந்து நிமிடங்களை, அந்த நச்சரிக்கும் வேலையை மறந்து வேறு பிடித்தமான வேலையை பிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஒரு உற்சாகமான டானிக் வேலை கிடைத்து விட்டால் சிரிக்கலாம், இல்லையென்றால் மிகவும் சிணுங்க வேண்டியுள்ளது.

9 நாட்கள் லீவ் கிடைத்துவிட்டது. SrDFA யிடம் discuss செய்ததில் சில வேலைகள் நகரும் நிலமைக்கு வந்தது. குஷி.

இந்த வாரத்தில் கடந்த சில தினங்களாக இறுகிக்கிடந்த மனது, லேசானது!

கடவுளே இந்த லேசான மனதைக் கொண்டு, பாட புத்தகங்களைப் படித்தால் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம்.

மனதை லேசாக சுறுசுறுப்பாக வைத்திருப்பது கடவுளே உன் பொறுப்பு

வாரம் 4 ஜனவரி 2008

ரயில்வே சேர்ந்த நாள், பிறந்த நாள் என்று கொண்டாட்டமாக சந்திரசேகர் பார்ட்டி கொடுத்தான். (23-01-08)

இப்படி எழுதினால் அவன் கோபிப்பான்.

Sr.AFA சாப்பாடு கொடுத்தார்!

ரசித்து சாப்பிட்டேன்.

FA & CAO, FA&CAO/WST வந்திருந்தனர்.

LAP எடுத்து, பாடங்களுடன் விழித்துக்கொண்டிருக்கிறேன் இந்த வாரம்.

வாரம் 5  ஜனவரி 2008

இந்த வாரம் இரண்டு நாள் பரீட்ச்சை! ஒண்ணரை நாள் வேலை!
ஓய்வு ஓய்வோதான். ஜமாய்த்தேன்.

பரீட்சை எழுதியிருக்கேன்யில்ல!!

குறள் : இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

Next Thirukkural 608 to drive away laziness.

funny pictures
moar funny pictures