பாருங்கள் சார் ஜூலை 31 இங்கு வந்த பிறகு இன்று தான் வர முடிகிறது.
ஆபீஸில் அவ்வளவு பிஸி.
முதலில் திருக்குறள். ஆக்கம் பற்றித்தான்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
Whate’er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
அப்புறம் 31 ஆம் வாரத்திலிருந்து ஆபீஸில் என்னவெல்லாம் நடந்தது:
31 ஆம் வார ஆபீஸ் டயரியை ஜூலை 31 எழுதுகிறேன்.
நன்று!
சில கோப்புகள் சின்னவர் (Sr.AFA) பார்வையில் உள்ளது.
சில கோப்புகளை செய்து கொண்டிருக்கிறேன்.
தடங்கள் மீது உருளும் சாதனங்கள். (ROLLING STOCK) – இவைகளை வாங்குவது, மாற்றி அமைப்பது குறித்த proposal – களை உருட்டிக்கொண்டு, இதை கிறுக்கிக்கொண்டு ஜாலியாக பொழுது போகின்றது……….
——————————————————————————–
காஃபி குடிக்கலாம்…..ஸ்டெனோ தலையில் பில் கட்டி பிரகாஷில் கலான்த்தும் புலாவும் சாப்பிடலாம். பாபாஜான் முல்லனவர் வீட்டு கிரஹபிரவேசத்திற்கு போய் நண்பர்களுடன் சாப்பிடலாம்
——————————————————————————–
அந்த புது ரயில்வே குடியிருப்புக்குப் போய் (EMD shed எதிரில்) அந்த சூழலில் joint birthday party enjoy செய்யலாம். கொடுத்த ரூ 500/- அதிகம்தான்…ஓக்கே…..
வாரம் 25, 2008 -ல் free யாக ஒரு பார்ட்டி அங்கு சாப்பிட்டேனே….அதை நினைத்து சமாதானப்பட வேண்டியது தான்!
——————————————————————————–
வாரம் 32.
1) இங்கே பாலகிருஷ்ணா சதுக்க வளாகத்தில், மூன்றாவது மாடியில், Stores Accounts, Establishment, PF&Pension மற்றும் Books செக்ஷன்கள் உள்ளன.
2) இங்கெல்லாம் அர்விந்த் என்ற பையன் தேநீர் விநியோகிக்கிறான்.
3) தடங்கள் பலவீனமாக இருப்பதாலும், Control கட்டளைகளாலும், ரயில் சில சமயங்களில் மெதுவாகச் செல்வதுபோல், ஆஃபீஸ் வேலைகள் மெதுவாகச் சென்று மன உற்சாகத்தை குன்றச்செய்வதுவிடும். அது இருப்பதுதான். இந்த வாரம் அது போல் உற்சாகம் சற்று குறைவாகவே இருந்தது.
4) ஒரு நண்பரின் (வீரபத்ர கௌடா) புது மனை புகு விழாவும், மற்றொரு நண்பரின் (கொரளஹள்ளளி) மகள் திருமண விழாவும் முறையே வியாழன் வெள்ளி தினங்களிலிருந்தது. இந்த விழாக்களுக்கு மதிய வேளைகளில் செல்வது தலையாய கடமையாக இருந்தது. விழாக்களுக்குச் செல்லும் முன் எல்லா ஊழியர்களிடமிருந்தும் மொய் பணம் வசூலிப்பதும் ஒரு சம்பிரதாயம். விழாக்களில் சம்ப்பரமமான சாப்பாடு.
5) அடுத்த வாரம் ரயில் வண்டி விரைவாக செல்லும் என்று எதிர் பார்ப்போம்!!!
33 ஆம் வாரத்திலிருந்து பிறகு.
இரண்டு படங்களை ரசிப்போம்.


