18-07-07
வேலை நாட்களில் ‘ஜம்’ நாள் புதன்.
‘ஜாம்’ நாள் என்று கூட சொல்லலாம்.
திங்கள், செவ்வாய் என்ற இரண்டு வறட்டு ரொட்டி நாட்கள் மேலேயும், வியாழன், வெள்ளி என்ற நெய்யில் வரட்டிய ரொட்டிகள் கீழேயும் உள்ளன. வேலை நாட்கள் என்ற சாண்ட்விச் மத்தியில் அமைந்த தித்திப்பான straberry மணம் கொண்ட ‘ஜாம்’ புதன்.
இந்த ‘ஜம்’ நாளை ஜாம் செய்து கொண்டிருக்கும் வேலைகள்:
(i)Sundararajan VR verification
(ii)Income tax Form 24
(iii)Permanent way Gang..Railway Board reference
(iv)Suspense Review
எப்பொழுது இந்த வேலைகள் முடியும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!
25-07-07
பட்டும் பார்த்தசாரதியும் மைசூர் inspection திங்கள் செவ்வாய் நாட்களில் முடித்துக்கொண்டு இன்று வந்தார்கள்.(அவர்கள் இல்லாமல் போர் அடித்தது)
25.07.07
இந்த புதனை Butter நாள் என்று கூப்பிடுகிறேன்.
ஏனென்றால் இது Better நாளல்லவா?
இன்னும் இரண்டு ரொட்டித் துண்டுகள் தானே இருக்கிறது தின்று முடிப்பதற்கு!
வெண்ணெய்..வெண்ணெய்…(இது வடிவேலு சொல்லும் வெண்ணெய்)
போன வாரம் குறித்த வேலைகள் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கிறது!
income tax personal returns fill up செய்தேன்…வழக்கம் போல் முழித்துக்கொண்டு…இன்னும் file பண்ண வேண்டும்.
திருக்குறள்:உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
Meaning:Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.
என் குறள்: திட்டி வேலை வாங்குவது,
திட்டல்களை பொறுத்துக்கொண்டு வேலை செய்வதற்குப் பின்.
Next writing plan: Day selected – Tuesday. Dates: 31-07-07; 07-08-07.
Posted by kirukan 