இரயில் accountsல் வேலை

shoot

கிறுக்கன்.

 *இந்திய ரயில்வே தென் மேற்கு மண்டலத்திலே, அக்கௌண்ட்ஸ் ஆபீஸிலே Senior Section Officer ஆக வேலை செய்கிறேன்.
 *ஹுப்பளி என்ற ஊரில் எங்கள் அக்கௌண்ட்ஸ் ஆபீஸ் MARCH 2003 வரை,
South Central Railway நிர்வாகத்தில் இருந்தது. 1-04-03 முதல் South Western Railway என்ற புதிய மண்டலமாக உருவெடுத்துள்ளது.
 *வர்க் ஷாப் அக்கௌண்ட்ஸ், டிவிஷனல் அக்கௌண்ட்ஸ் என்று இருபது வருடங்களுக்கு மேல் குப்பை கொட்டிவிட்டு. . . ……
இப்பொழுது FA&CAO ஆபீஸில் குப்பை கொட்டிக் கொண்டுள்ளேன்.
இது தலைமை அலுவுலகமாக்கும்! அக்காங்!

 *எனது FLAT, எனது மோட்டார்ஸைக்கிள், எனது முதல் I class சதாப்தி வண்டிப்பயணம், என் பெண்ணை Engineering படிக்க வைப்பது, பையனை ஒரு முறை டார்ஜிலிங் காம்ப் கூட்டிச்சென்றது, எனக்கு ஒரு முறை G.M award கொடுத்தது…எல்லாமே இந்த Railway Accounts வேலைதான்!
 *வீட்டில் மனைவியிடம் முழிப்பது போல், ஆஃபீஸில் முழிப்பதும், அவைகள் நிகழும் பொழுது கசந்தாலும், நினைவிலிருந்து கொணர்ந்து எழுதும்பொழுது…..இனிமை…..இனிமை.
கசப்பை இனிமையாக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.

மறுமொழி இடுக